பழ.நெடுமாறன் வெளியிட்ட புதிய தகவல்! செய்திகளின் தொகுப்பு
2009இல் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.
இது முதல் தடவை அல்ல. 1984ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பத்திற்கும் மேற்பட்ட தடவை சிங்கள அரசும், சிங்கள இராணுவமும் அறிவித்திருக்கின்றார்கள்.
எதற்காக இதனை செய்கிறார்கள் என்பதுதான் இங்கு முக்கியமானது என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் இருக்கின்ற ஈழத்தமிழர்கள், இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களின் மன உறுதியை தகர்க்க வேண்டும்.
அவர்களை அச்சமடையச் செய்ய வேண்டும், தங்களுக்கு அவர்களின் எதிர்ப்பை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பொய்ச் செய்தியை தொடர்ந்து பரப்பிவருகின்றனர் எனவும் நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செயதிகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,




