மீண்டும் பரபரப்பாகும் கொழும்பு! களத்தில் அதிரடிப்படையினர்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை வருகை அடுத்த மாதம் (செப்டெம்பர்) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கொழும்பு அரசியல் மட்டங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க >>> கோட்டாபயவுடன் தொலைபேசியில் உரையாடிய ரணில்! இறுதி நேரத்தில் மாற்றப்பட்ட முடிவு
2 போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு - புறக்கோட்டையில், பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி போக்குவரத்து தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>>கடுமையாகும் நடைமுறை! இலங்கை வாழ் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
3 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு கோரி குற்றவியல் விசாரணை திணைக்களம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியுமான துலாஞ்சலி பிரேமதாசவுக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.
மேலும் படிக்க >>>ஜனாதிபதியின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம்:சஜித் பிரேமதாசவின் சகோதரியிடம் விசாரணை (Video)
4 சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை வழங்குவதற்கு, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குனர்களிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் தேவை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க >>>இலங்கைக்கு மற்றுமொரு நிபந்தனை விதித்த சர்வதேச நாணய நிதியம்
4 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு தேவையான பாதுகாப்புக்களை செய்து கொடுக்குமாறு முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் படிக்க >>>இலங்கை திரும்பும் கோட்டாபயவுக்கு எட்டு அடுக்கு பாதுகாப்பு! ரணிலிடம் சென்ற தகவல்
5 திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுட்குட்பட்ட 64ஆம் கட்டை பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்து சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் 3பேர் உயிரிழந்துள்ளதுடன் 3பேர் அதி திவிர சிகிச்சை பிரிவில் முதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க >>>திருகோணமலையில் கோர விபத்து; 3 பேர் உயிரிழப்பு (Photos)
6 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச விடுத்த அழைப்பை பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நிராகரித்துள்ளார்.
மேலும் படிக்க >>>பசிலின் அழைப்பை அடியோடு நிராகரித்த பீரிஸ்
7 இலங்கை மத்திய வங்கியின் புதிய புள்ளிவிபரங்களுக்கு அமைய 2022 ஏப்ரல் மாதம் அளவில் இலங்கை அரசு செலுத்த வேண்டிய மொத்த கடன் 23 ஆயிரத்து 310.1 பில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க >>>ஒரு மில்லியனை தாண்டியது இலங்கையின் தனி நபர் கடன்:நாளை பிறக்கும் குழந்தையும் கடனாளி
8 தலைக்கணம், வளைந்துக்கொடுக்காத தன்மை மற்றும் தவறான நபர்களிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டமையே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த நிலைமை ஏற்பட காரணம் துறவிகள் குரல் அமைப்பின் தலைவர் கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>கோட்டாபயவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைக்கான காரணத்தை கூறும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
9 பொது மக்களின் அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ஆம் பிரிவினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்டு ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் படிக்க >>>ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
10 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான பெங்கிரிவத்தை வீட்டிற்கும் பிரதேசத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>> பரபரப்பாகும் கொழும்பு - கோட்டாபயவின் வீட்டுக்கு தீவிர பாதுகாப்பு - அதிரடி படையினர் குவிப்பு