ஜனாதிபதியின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம்:சஜித் பிரேமதாசவின் சகோதரியிடம் விசாரணை (Video)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு கோரி குற்றவியல் விசாரணை திணைக்களம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியுமான துலாஞ்சலி பிரேமதாசவுக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.
இதனடிப்படையில் அவர் இன்று முற்பகல் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
விசாரணைகளுக்கு உதவுமாறு அழைத்தனர்
வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள துலாஞ்சலி பிரேமதாச, தற்போதைய ஜனாதிபதியின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்க வருமாறு அழைத்தனர்.
நான் வந்து வாக்குமூலம் வழங்கினேன். சம்பவம் நடந்த போது நான் அங்கு ஓரிடத்தில் இருந்தேன்.
விசாரணைகளுக்கு உதவுவதற்காக என்னை வருமாறு அழைத்தனர்.
நான் வாக்குமூலம் ஒன்றை வழங்கினேன். விசாரணை அதிகாரிகள் நட்புறவாக உரையாடினர்.வாக்குமூலம் வழங்கிய பின்னர் அது முடிந்து விட்டது.
உண்மையை கூறினால் பிரச்சினைகள் இருக்காது
எந்த பிரச்சினையுமில்லை. பல போராட்டங்கள் இருக்கின்றன. போராட்டம் என்பது ஒரு போராட்டமல்ல.
ஒவ்வொருவர் தனிப்பட்ட ரீதியில் போராட்டங்களை நடத்தினர். விசாரணைகளுக்கு உதவ வந்து வாக்குமூலம் வழங்குமாறு கூறும் போது நாம் வந்து உண்மையை கூறினால், எமக்கு எந்த பிரச்சினையுமில்லை.
அந்த பிரதேசத்திற்கு சென்றிருந்ததால், அழைத்து விசாரித்தனர். வேறு விடயங்கள் இல்லை. இத்தோடு முடிந்து விட்டது என துலாஞ்சலி கூறியுள்ளார்.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
