மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ள அநுர! ஏமாற்றம் தொடர்பில் ஐ.தே.க வெளியிடும் தகவல்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் தற்போது கவலையில் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன(Ruwan Wijewardena) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கவலையுடன் இருக்கிறார்கள்
மேலும், இலங்கையில் தற்போதுள்ள அரசியல் நிலைமைகளை பார்க்கும்போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள் இன்று கவலையுடன் இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறி இருக்கிறது. இன்று அவர்கள் கவலைப்படுகின்றனர். தாங்கள் ஏமாற்றமடைந்ததாக இன்னும் சில மக்கள் வருத்தப்படுகிறனர்.
அதனால் இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியாக ஐக்கியப்பட்டு, நாட்டு மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam