நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி: அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியானது மக்களிடையே பாரியளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த அரசாங்கத்தை போலவே தற்போதும் நடப்பதால் மீண்டும் நாடு நெருக்கடியை சந்தித்தால் தற்போதைய அரசாங்கத்தையும் விரட்ட காலிமுகத்திடலில் மீண்டுமொரு முறை கூடாரம் அமைக்கவும் தயார் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையை பார்த்து முன்னேற வேண்டுமேன நினைத்த சிங்கப்பூர் தற்போது எந்த நிலையில் உள்ளது நாம் எந்த நிலையில் உள்ளோம் என கேள்வியெழுப்பியுள்ளனர்.
நமது நாடு சிங்கப்பூர்(Singapore) அல்லது பிரித்தானியா(UK) போன்று மாற அவசியமில்லை எனவும் நாட்டிலுள்ள ஊழல் ஒழிக்கப்பட்டு நியாயமான ஆட்சி இடம்பெற்றால் போதும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், புதிய அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கை காணப்படுவதாக தெரிவித்த மக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர்களுக்கு உதவவும் தயார் என குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |