அநுர அரசின் ஆயுட்காலம்! ஜோதிடர்களை நாடும் பிரபல அரசியல்வாதிகள்
ஆட்சியில் உள்ள அநுர(Anura Kumara Dissanayaka) அரசாங்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து முன்னாள் அரசியல்வாதிகள் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக தமது ஆஸ்தான ஜோதிடர்களிடம் ஆலோசனை பெற்று வருவதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மன வேதனையில் பலர்
பொதுத் தேர்தலின் போது சரியான முறையில் செயற்பட்ட போதும் தாம் தோல்வி அடைந்துள்ளதாக பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன வேதனையில் உள்ளனர்.

கடந்த அரசாங்கத்தில் பிரபல்யமாக இருந்த பல அரசியல்வாதிகள் ஜோதிடர்களின் இல்லங்களில் முகாமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்க வழிமுறைகள் உள்ளதா என்பது குறித்தும் பலர் பரிசீலித்துவருவதாகவும் குறித்த செய்தி சுட்டிக்காட்டுகின்றது.
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam