இலங்கையின் புதிய அரசியலமைப்பு! சபாநாயகர் வெளியிட்டுள்ள நம்பிக்கை
புதிய அரசமைப்பை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்தால் வழங்கப்பட வேண்டிய முழுப் பங்களிப்பையும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இதற்கு எதிரணிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என நம்புகின்றோம் என்று சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன(Jagath Wickramaratne) தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய வேலைத்திட்டம்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் பலமான ஆளுங்கட்சி உள்ளது. எனவே, புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்து அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால், சட்டவாக்க சபையில் அதனை நிறைவேற்றிக்கொள்வதற்குரிய பங்களிப்பை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

புதிய அரசமைப்பு அவசியம் என நாட்டு மக்களும் கருதுகின்றனர். இதற்குரிய மக்கள் ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்குரிய பொறுப்பு உள்ளது.
இது தொடர்பிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். புதிய அரசமைப்பை இயற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பாரிய மோசடிகளுடன் தொடர்புபட்டிருப்பதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri