அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பாரிய மோசடிகளுடன் தொடர்புபட்டிருப்பதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பாரிய மோசடிகளுடன் தொடர்புபட்டிருப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த குற்றச்சாட்டை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான காமினி லொகுகே முன்வைத்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறை
உலகம் முழுவதிலும் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்தவர்களின் விபரங்களை வெளியிடும் பெண்டோரா பேபர்ஸ் ஆவணங்களில் இலங்கை ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களின் பெயர்கள் இந்த ஆவணத்தில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நபர்கள் குறித்து எதிர்வரும் வாரத்தில் தாம் அம்பலப்படுத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய பதவிகள்
அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களின் சொத்துக்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தாம் அம்பலப்படுத்த உள்ளதாக காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்கள் வெளியிட்டதன் பின்னர் அரசாங்கம் குறித்த நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, எந்தவொரு விடயம் தொடர்பிலும் விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு சந்தர்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை எதிர்கொள்ள தாங்கள் தயார் எனவும் காமினி லொகுகே மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
