தமிழர் பகுதியில் குடும்பஸ்தர் மீது கடற்படையினர் கொடூர தாக்குதல் (Video)

Kilinochchi Sri Lanka Police Investigation Sri Lanka Navy
By Erimalai Sep 05, 2022 07:45 PM GMT
Report

கிளிநொச்சி- வலைப்பாடு பகுதியில் குடும்பஸ்தர் மீது கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இத் தாக்குதல் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது வலைப்பாடு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இராசரத்தினம் நிமால் என்னும் 3 பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

தாக்குதலிற்குள்ளான குடும்பஸ்தரின் படகினை, அவரது நண்பர்கள் நேற்று மாலை 3.30 மணியளவில் கடலிற்கு எடுத்து சென்றுள்ளனர்.

மாலை ஆகியும் கரை திரும்பாத நிலையில் குறித்த நபர் கடற் கரைக்கு சென்று அவதானித்துள்ளார்.

கடற்படை முகாம்

பின்னர் 6 மணியளவில் கரைக்கு திரும்பிய படகு, கடற்படை முகாமிற்கு முன்பாக கரை ஏற்றப்பட்டது.

இந்த நிலயைில், படகினை செலுத்தியவர்கள், கடற்படை முகாமிற்கு பதிவிற்காக சென்றுள்ளனர்.

இதன்போது குடும்பஸ்தரின் படகில் ஏற்றி வந்த மண்ணெண்ணையை பதிவு மேற்கொள்ளும் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த மண்ணெண்ணை கொள்கலனை அகற்றுமாறு அவர்களிடம் கடற்டை அதிகாரி ஒருவர் தெரிவித்ததை அடுத்து அவர்களை அதனை அகற்றியுள்ளனர்.

கருத்து முரண்பாடு

தமிழர் பகுதியில் குடும்பஸ்தர் மீது கடற்படையினர் கொடூர தாக்குதல் (Video) | Sri Lanka Navy Kilinochchi

இந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 

இதன்போது கடற்படை அதிகாரி ஒருவர் அவர்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கியை சூடுவதற்கு ஏற்ற வகையில் தயார் செய்ததாகவும், அதனை ஒளிப்பதிவு செய்ய முற்பட்டபோது தொலைபேசியை பறித்து, பின்னர் தம் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, தன்னையும், தன்னுடன் நின்றவர்களையும் கடற்படையினர் துரத்தி துரத்தி தாக்கியதாகவும், தாக்குதலின் போது தான் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், சம்பவத்தின்போது, காயங்களிற்குள்ளான நபர் சுயநினைவிழந்து கிடப்பதை அவதானித்த கிராமத்தவர்கள், அவரை வேரவில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளிற்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், குறித்த நபருக்கு சொந்தமான இரண்டு கையடக்க தொலைபேசிகளும், கடற்படையினரால் எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பொதுமகனும், இரண்டு கடற்படை உத்தியோகத்தர்களும் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் ஏற்புடையதல்ல

தமிழர் பகுதியில் குடும்பஸ்தர் மீது கடற்படையினர் கொடூர தாக்குதல் (Video) | Sri Lanka Navy Kilinochchi

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்ட கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜ், ”தாக்குதல் சம்பவம் ஏற்புடையதல்ல எனவும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.      

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US