உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலமாக இலங்கை தெரிவு
2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா பயண ஊடகமான Big 7 Travel மேற்கொண்ட சமீபத்திய ஆய்விற்கமைய, இந்த தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கான உலகின் சிறந்த 50 தீவு தலங்களில் இலங்கை முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இலங்கைக்கு முதலிடம்
833 மைல் நீளமுள்ள கடற்கரை, ரம்மியமான மத்திய மலைகள், உலகப் புகழ்பெற்ற தேயிலைத் தோட்டங்கள், செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் தனித்துவமான பல்லுயிர் பெருக்கம் ஆகியவை இந்தத் தரவரிசையில் இலங்கை முதலிடத்தைப் பிடித்ததற்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

மேலும், யால தேசிய பூங்கா மற்றும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமான சிகிரியா போன்ற பிரதான சுற்றுலாத் தலங்களும் இந்த வெற்றிக்கு பெரும் பங்காற்றியுள்ளது.
இதேவேளையில், உலகின் சிறந்த 50 கடற்கரைகளை உள்ளடக்கிய தரவரிசைப் பட்டியலில், இலங்கையின் உணவட்டுன கடற்கரை 26வது இடத்தைப் பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam