இலங்கை அவசரகால தயார் நிலைக்கு செல்ல வேண்டும்! ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம்
தெற்காசியாவில் இலங்கையிலேயே முதியோர் சனத்தொகை வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2030ஆம் ஆண்டில், இலங்கையில் 5 பேரில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருப்பார்கள் என்று இலங்கையில் செயற்பட்டுவரும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது.
எனவே இலங்கை அவசரகால தயார் நிலைக்கு செல்ல வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் கோரியுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிறுவனம் இலங்கைளின் ஹெல்ப் ஏஜ் நிறுவனத்துடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதன்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மூத்த குடிமக்கள் தொடர்பான ஆயத்தங்களுக்காக ஆரம்ப கால ஆலோசனை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன் அவர்களின் தேவைகளுக்கு பதிலளிப்பதற்கும், வயதானவர்கள் மற்றும் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.