இலங்கை குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் தீர்மானம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Sri Lanka China
By Benat May 12, 2023 01:09 PM GMT
Report

இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தலை தடுக்கும் வகையில் சுற்றாடல் அமைப்புகளினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில் அமைச்சரவை குழு உறுப்பினர்கள் மற்றும் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இம்மாதம் 19ஆம் திகதி  இவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(11) உத்தரவிட்டது.

இலங்கை வனஜீவராசிகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு சங்கம், மாத்தறை ஆனந்த சாகர தேரர், ஒட்டாரா குணவர்தன, ருக்ஷான் ஜயவர்தன உள்ளிட்ட 27 பங்குதாரர்கள் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்தபோதே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சட்டத்திற்கு எதிரான முடிவு

இலங்கை குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் தீர்மானம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Sri Lanka Monkey Export To China

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, பிரதிவாதிகள் ஒரு இலட்சம் குரங்குளை இந்த நாட்டிலிருந்து சீன நிறுவனமொன்றுக்கு பரிசோதணைக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

எனவே எந்த நேரத்திலும் இலங்கை குரங்குகள் சீனாவுக்கு ஏற்றுமதியாகும் அபாயம் உள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். இந்த முடிவு சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது என ஜனாதிபதியின் சட்டத்தரணி தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையானது இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதகத்தை ஏற்படுத்துவதாகவும், விலங்குகளுக்கு அதிகளவில் கொடுமைகள் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் சட்டத்தரணி, இந்த நடவடிக்கை மிருகவதை சட்டம் மற்றும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு எதிரானது எனவும் தெரிவித்தார்.

எனவே குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் உத்தரவை உடனடியாக பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, உரிய உத்தரவை பிறப்பித்தார்.

ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முடிவு சட்டத்திற்கு எதிரானது என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.

மேலும், அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்க ஆணை பிறப்பிக்கவும், வனவிலங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான உரிமம் வழங்குவதைத் தடுக்க வனவிலங்கு இயக்குநர் ஜெனரலுக்கு உத்தரவு பிறப்பிக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US