இலங்கையில் தொலைபேசி நிறுவனத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி - கோடிக்கணக்கான பணம் மாயம்
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு சுமார் 02 கோடி ரூபாவை மோசடி செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தொலைபேசி நிறுவனத்தின் முகாமையாளர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் மே மாதம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நிறுவனத்தின் சிம் அட்டை மூலம் இந்த அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளைப் பெற்று 53983 அமெரிக்க டொலர்களை மோசடி செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை செய்துள்ளது.



