அதிக சத்தத்துடன் வேகமாக பறந்த மோட்டார் சைக்கிள்கள்! மடக்கி பிடித்த பொலிஸார்
பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக சத்ததுடன் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராக வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியா வைரவபுளியங்குளம் பகுதி, பூங்கா வீதி என்பவற்றில் அதிக சத்தத்துடன் வேகமாக மோட்டார் சைக்கிள்கள்கள் சிலவற்றை இளைஞர்கள் செலுத்தி வருகின்றனர்.
பொலிஸாரின் கவனம்
மேலும், அந்த பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடுவோர், அந்த பகுதியில் வசிப்போர், மாணவர்கள் என்போருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தி வந்தனர். அத்துடன் விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் வவுனியா மாநகர சபையால் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டத்தையடுத்து பூங்கா வீதி, வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளில் கடமையில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிள்களை செலுத்திய சாரதிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.





வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
