சர்வதேச ரீதியில் ஊழல் மட்டத்தில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மாற்றம்
சர்வதேச ரீதியாக ஊழல் தடுப்பு நடவடிக்கையில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இன்று வெளியிட்ட 2025ஆம் ஆண்டிற்கான ஊழல் புலனாய்வு சுட்டெண்ணில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு 32 புள்ளிகளுடன் 121வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது 35 புள்ளிகளைப் பெற்று 14 இடங்கள் முன்னேறி 107வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை
இலங்கை தனது தரவரிசையில் 14 இடங்கள் முன்னேறி, ஊழலுக்கு எதிரான முயற்சிகளில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்க துறையில் ஊழலை ஒழிப்பதில் அண்மைக்காலமாக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் மற்றும் நிபுணர்களிடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கையை இந்த தரவரிசை மாற்றத்திற்கு காரணமாகும்.
பட்டியலில் இலங்கை முன்னேற்றமடைந்த போதிலும், இலங்கையின் மதிப்பெண் உலக சராசரியான 43 விடவும் குறைவாகவே உள்ளது. இது நிர்வாகக் கட்டமைப்பில் இன்னும் சவால்கள் இருப்பதை உணர்த்துகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையின் அதிகபட்ச மதிப்பெண் 40 ஆகவும், குறைந்தபட்ச மதிப்பெண் 36 ஆகவும் பதிவாகியுள்ளது. இப்பட்டியலில் டென்மார்க் 89 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இதேவேளை, தெற்கு சூடான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் கடைசி இடங்களைப் பெற்றுள்ளன.