ராஜபக்ச குடும்பத்தில் நடப்பது என்ன? வெளிவரும் முரணான தகவல்கள் : செய்திகளின் தொகுப்பு (Video)
அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக தற்போது வெளியிடும் தகவல்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பாடாக இருந்து வருவதை காண முடிகிறது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கில் இருந்து அவரது தனிப்பட்ட செயலாளராகவும் அண்மைய காலமாக நாடாளுமன்ற விவகார செயலாளராகவும் கடமையாற்றிய உதித் லொக்கு பண்டார, கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்த விடயம் பகிரங்கமான செய்தி. எனினும் அப்படியான சம்பவம் நடந்தது தனக்கு தெரியாது என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்ததை உதித் லொக்கு பண்டார தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுவொருபுறமிருக்க, பிரதமர் மகிந்த ராஜபக்ச சத்திர சிகிச்சை செய்துகொண்ட சம்பவத்தையும் அமைச்சர் நாமல் ராஜபக்ச மறுத்திருந்தார்.
எனினும் பிரதமரின் மூத்த சகோதரர் அமைச்சர் சமல் ராஜபக்ச, (Chamal Rajapaksa)
பிரதமர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக பகிரங்கமாக
ஏற்றுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தம்பதியாய் வந்த ஜேர்மன் பெண் - இந்திய இளைஞருக்கு சோதனை! உயிரை காப்பாற்றி கொள்ள ஓடிய பரிதாபம்.. வீடியோ News Lankasri

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri
