இலங்கையில் வசிக்கும் நபர் ஒருவருக்கு மாதாந்தம் தேவைப்படும் பணத் தொகை..
இலங்கையில் வசிக்கும் நபர் ஒருவரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு குறைந்தபட்சம் 16,318 ரூபா மாதாந்தம் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாத அறிக்கை
மேலும், பெப்ரவரி மாத அறிக்கைகளின் படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மாதாந்தம் தனி ஒரு நபருக்கான அதிக செலவுகளைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் பதிவாகியுள்ளதுடன், குறைந்த செலவுகளைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை மாவட்டமும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் நபர் ஒருவருக்கு மாதாந்தம் தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 17,599 ரூபா தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri