காதலிக்காக தொலைபேசியை திருடிய காதலனுக்கு ஏற்பட்ட கதி - செய்திகளின் தொகுப்பு
அவிசாவளை - ஹன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தெனிய பிரதேசத்தில் சுமார் 68 லட்சம் ரூபாய் பெறுமதியான கார் மற்றும் சுமார் 11000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 8ஆம் திகதி சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய 9ஆம் திகதி பல்வத்த பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஓட்டுநர் சோதனைக்காக காரின் உரிமையாளருடன் சென்றுள்ளார். அங்கு, காரில் ஏதோ சத்தம் கேட்டதாகவும், காரில் இருந்து இறங்கி, சத்தம் கேட்ட இடத்தை சோதனை செய்யுமாறு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
உரிமையாளர் சோதனையிட்ட போது சந்தேக நபர் காரை ஓட்டிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பிலான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |