இளம் காதலர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி - குடும்பத்தினரால் நேர்ந்த துயரம்
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வீதி ஓரத்தில் பேசிக் கொண்டிருந்த காதலர்களில், காதலனை வீட்டுக்கு அழைத்துச் சென்று காதலியின் தந்தை உள்ளிட்ட குழுவினர் தாக்கியுள்ளனர்.
இந்த ஜோடியில் காதலனுக்கு 17 வயது எனவும் காதலிக்கு 18 வயது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
நேற்று கடுகஸ்தோட்டை நகருக்கு அருகில் உள்ள வீதியொன்றில் இளம் காதலர்கள் பேசிக் கொண்டிருந்த போது யுவதியின் தந்தையும் அவரது நண்பரும் இணைந்து காதலனை தாக்கியுள்ளனர்.
குழுவினர் தாக்குதல்
பின்னர் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று தந்தை, தாய் மற்றும் தந்தையின் நண்பர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் இளைஞனை இவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். தமது மகன் தாக்கப்பட்டதை அறிந்த அவரது பெற்றோர், அவரை பேராதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் காதலியின் தந்தை, தாய், தந்தையின் நண்பர் ஆகியோரையும் கைது செய்துள்ளதுடன் அவர்கள் மூவரையும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
