நாட்டை முடக்கப் போவதாக நினைத்து அச்சத்தில் தென்னிலங்கை அரசியல்வாதிகள்
எதிர்வரும் நாட்களில் முடக்கம் அல்லது ஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் திட்டம் உள்ளதா என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முடக்க நிலை அறிவிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன. இதனால் அச்சமடைந்த அரசியல்வாதிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இது தொடர்பில் வினவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முடக்க நிலையை மறுக்கும் ஜனாதிபதி, பிரதமர்

எனினும் முடக்க நிலையோ ஊரங்கு சட்டமோ நடைமுறைப்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளனர்.
அடுத்த வாரம் மற்றுமொரு எரிபொருள் கப்பல் நாட்டிற்கு வரவுள்ளதால், நாட்டை முழுமையாக மூடவோ, ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவோ தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளனர்.
அச்சத்தில் தென்னிலங்கை அரசியல்வாதிகள்
எப்படியிருப்பினும் திங்கட்கிழமை முதல் இரண்டு வார காலத்திற்கு பாடசாலைகள் மற்றும் அரச சேவைகளுக்கு ஒன்லைன் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் 9ஆம் திகதி ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில், பல அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து அளித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பெரும் நெருக்கடி நிலையால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் - அமைச்சர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
விறகு சேகரிக்க காட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி