இலங்கையில் விதைப்பை அகற்றத்தின் பின்னணியில் மர்மம் - வைத்தியர் வெளியிட்ட தகவல்
உலகில் எந்தவொரு நாட்டிலும் விதைப்பை பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாதென காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் நேற்று தெரிவித்துள்ளார்.
பெயர் குறிப்பிட விரும்பாத இந்த விசேட வைத்தியர், விதைப்பை பொருத்த முடியாதென குறிப்பிட்டுள்ளார்.
நபர் ஒருவர் விபத்துக்குள்ளாகி விதைப்பைக்கு பாதிப்பு ஏற்படுத்த நேரிடும் போது அதனை அகற்ற நேரிடும். சில நேரங்களில் மரணங்கள் ஏற்பட கூடும்.

சிறுநீரக விற்பனையில் ஈடுபடும் நபர்களின் வியாபாரத்திற்கு பின்னால் இருக்கும் நபர்கள் சிறுநீரகத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் பணம் வழங்குவதில்லை என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு அறுவை சிகிச்சையும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ள கூடாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிறுநீரக விற்பனைக்கு இணையாக விதைப்பை அகற்றும் மர்மகும்பல்கள் செயற்படுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வைத்தியரின் கருத்து வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri