இரவில் முடங்கும் இலங்கை! துரதிஷ்டமான நிலை தொடர்பில் எச்சரிக்கை
இலங்கையில் நாங்கள் இரவு 10 மணிக்கு வெளியே நடக்கும்போது, அது இருட்டாக இருக்கிறது, எதுவும் திறக்கப்படவில்லை, அனைத்தும் முற்றாக முடங்கியிருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடு ஒருபோதும் வளர்ச்சியடையாது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நான் இரவு களியாட்டங்களைப் பற்றிப் பேசும்போது, மக்கள் அதை மிகவும் தவறாக எடுத்துக் கொண்டனர். இரவு வாழ்க்கை என்றால் இரவு பொருளாதாரம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் இரவு பொருளாதாரம் பற்றி பேசுகிறேன்.
உலகில் எல்லா இடங்களிலும் வளர்ந்த ஒவ்வொரு நாடும் இரவுப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில் 70 வீத வருமானம் இரவுப் பொருளாதாரத்தின் மூலமும் 30 வீத வருமானம் பகல் பொருளாதாரத்தின் மூலமும் பெறப்படுகிறது.
இலங்கையில் நாங்கள் இரவு 10 மணிக்கு வெளியே நடக்கும்போது, அது இருட்டாக இருக்கிறது, எதுவும் திறக்கப்படவில்லை, அனைத்தும் மூடப்பட்டிருக்கும், முடங்கிய நிலையில் இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்.
இரவு 10 மணிக்கு மேல் மருந்தகம் திறக்கப்படுவதில்லை. இலங்கையில் ஒரு பனடோல் கூட இரவில் கிடைக்காது. எனவே, இதுபோன்ற ஒரு நாடு ஒருபோதும் வளர்ச்சியடையாது, வருமானத்தை ஈட்ட முடியாது.
மிகவும் துரதிஷ்டமான நிலை
நான் பேசுவது இரவு வாழ்க்கை கலகலப்பாக இருக்க வேண்டும் என்றுதான். இரவு நேரக் களியாட்ட வாழ்க்கை என்றால் சிலர் கசினோ பொழுது போக்குக்காக வருகின்றனர், சிலர் இரவு விடுதிகளில் இசை மற்றும் நடனத்திற்காக வருகிறார்கள், சிலர் பாங்கொக், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற தெரு உணவுகளை அனுபவிக்க வருகிறார்கள்.
இந்த நாடுகளில் உணவுடன் கூடிய இரவு நேரக் கடைகள் காணப்படுகின்றன. தேங்காய்ச் சிரட்டையில் சிறிய ஆபரணத்தை தயாரிக்கும் எமது மக்களுக்கு ஒரு கடையை திறந்து வெளிநாட்டினர் அப்பொருட்களை வாங்குவதற்கு ஒரு வாய்ப்பை இது வழங்கும்.
இதுபோன்றதொரு இரவுநேர வாழ்க்கையைத்தான் நான் பேசுகிறேன். இருந்தபோதும் இதனை சிலர் விமர்சிக்கின்றனர் என்பது மிகவும் துரதிர்ஷ்டமானது என குறிப்பிட்டுள்ளார்.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
