இலங்கையில் முதலீடு செய்யுமாறு ரஸ்ய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு
இலங்கையில் முதலீடு செய்யுமாறு ரஸ்ய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரஸ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் ஜானிதா லியனகே இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
இலங்கையில் முதலீடு
இலங்கையில் ரஸ்ய முதலீடுகளை கொண்டு வரும் நோக்கில் அந்நாட்டு வர்த்தகர்கள் மற்றும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ரஸ்ய கட்டுமான நிறுவனங்களுடன் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து பேசப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவில் விரைவில் வர்த்தக மையமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் ரஸ்ய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அமைச்சர்களான பந்துல குணவர்தன மற்றும் மகிந்த அமரவீர ஆகியோர் ரஸ்யாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
