இலங்கைக்கான முதலாவது சர்வதேச பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்
இலங்கைக்குச் செல்லும் இந்தியாவின் முதல் சர்வதேச கப்பல் பயணத்தை, இந்திய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார்.
நாடு முழுவதும் கப்பல் சுற்றுலாவை ஆரம்பிக்க மத்திய அரசு ஆரம்பித்துள்ள தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகச் சென்னை துறைமுகத்தில் இந்த பயணம் ஆரம்பமானது.
இதன்படி சென்னையில் இருந்து புறப்பட்ட எம்வி எம்பிரஸ் என்ற சொகுசுக் கப்பல் நாளைய தினம் (06.06.2023) இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சென்றடைந்து, பின்னர் திருகோணமலைக்குச் செல்லும்.
இதன் பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்தின் காங்கேசன்துறைக்குச் சென்று மீண்டும்
சென்னைக்குத் திரும்பும்.
இந்த சொகுசுக் கப்பல், பல்வேறு வர்த்தகத்தொகுதி, மதுசாலை, நீச்சல் குளங்கள்,
திரையரங்குகள் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கைக்கான முதலாவது சர்வதேச பயணிகள் கப்பலை மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இலங்கைக்கான முதல் சர்வதேச பயணக் கப்பலின் பயணத்தை ஆரம்பிப்பதற்காக அவர் இன்று(05.06.2023) தமிழகத்தின் தலைநகருக்கு வரவுள்ளார்.
சோனோவால் சென்னை கப்பல் முனையத்தில் மாலை 5.00 மணிக்கு இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு கார்டில்லியா குரூஸ் என்ற இலங்கைக்கான முதலாவது சர்வதேச கப்பலை அவர் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
கொழும்பு துறைமுகம்
கார்டில்லியா குரூஸ் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வரும்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை வரவேற்பார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துளள்ளது.
இதேவேளை சென்னையின் கிழக்கு கடற்கரையை கப்பல் சுற்றுலா மையமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சோனோவால் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |