இலங்கையில் சர்ச்சைக்குரிய ஊசியால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முக்கிய தகவல்
அண்மைய நாட்களாக இலங்கையில் உள்ள பல அரச வைத்தியசாலைகளில் ஊசி மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமையினால் பல நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
ஊசி மருந்து
இதன்போது ஊசி மருந்து, பயன்படுத்தப்பட்டமையால் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை நாடாளுமன்றத்தின் பொதுக் கூடத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஊசி மருந்து பாவனையினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
