விரைவில் குறையும் பொருட்களின் விலை!! வட்டி விகிதம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பணவீக்கம் உச்ச நிலையை அடைகின்ற அதேவேளை, இந்த மாதம் பொருட்களின் விலை குறைவடையலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் நாட்டின் நிதியை சரிசெய்ய மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் பணவீக்கம் செப்டம்பர் மாதம் 69.8 வீதமாக அதிகரித்துள்ளது என்றும், இது இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத நிதி நெருக்கடியை காட்டி நிற்பதாகவும் அவர் கூறினார்.
வட்டி விகிதங்களை உயர்வாக வைத்திருக்க வேண்டும்
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது, அதேவேளை பணவீக்கத்தினை குறைக்க வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்வாக வைத்திருக்க வேண்டும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை கடந்த மாதம் ஆரம்பித்துள்ளதுடன், இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வதேச நாணய நிதிய உதவிகள் கிடைக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
சர்வதச நாணய நிதியத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு ஏற்ப அதிக வரிகள் மற்றும் அரச நிறுவனங்களின் பரந்த சீர்த்திருத்தங்களை உள்ளடக்கி 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை அரசாங்கம் நவம்பர் நடுப்பகுதியில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.