அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பில் வர்த்தகர்கள் விசனம்

Fuel Price In Sri Lanka Government Of Sri Lanka Economy of Sri Lanka
By Sivaa Mayuri Oct 23, 2022 07:28 AM GMT
Report

எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா போன்ற சில அத்தியாவசியப் பொருட்களின் விலை அண்மைக்காலமாக குறைக்கப்பட்ட போதிலும், அதன் நன்மைகள் இன்னும் நுகர்வோருக்குச் சென்றடையவில்லை.

இதற்கு ஏனைய பொருட்களின் விலையுயர்வுகளும் காரணம் என்று சில்லறை வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வாரம், தனியார் வர்த்தகர்களால் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா சந்தைக்கு வந்ததால், கோதுமை மாவின் மொத்த விலை 85 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

மக்களின் அன்றாட செலவீனங்கள்

அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பில் வர்த்தகர்கள் விசனம் | Traders Are Worried Price Of Greenhouse Products

அதே வாரத்தில் 92 ஒக்டேன் பெட்ரோல் 40 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 15 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8ஆம் திகதி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 245 ரூபாவால் குறைக்கப்பட்ட நிலையில் 5 கிலோ மற்றும் 2.3 கிலோ சிலிண்டர்களின் விலை முறையே 99 ரூபா மற்றும் 45 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலை குறைந்தாலும் அன்றாட செலவுகள் அதிகரித்து வருகின்றமை காரணமாகவே வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்க முடியவில்லை என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடியினால் ஒரு கிலோ கோதுமை மா 250 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.

தட்டுப்பாடு காரணமாக கடந்த மாதங்களில், அது 420 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பின்னர் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் வெண்ணெய் மற்றும் முட்டையின் விலை உயர்வாகவே உள்ளது என்று வெதுப்பக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இன்னும் சில வெதுப்பக உரிமையாளர்கள், தற்போதும் ஒரு கிலோ மாவை 300 ரூபாய் கொடுத்து கறுப்புச் சந்தையில் கொள்வனவு செய்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பில் வர்த்தகர்கள் விசனம் | Traders Are Worried Price Of Greenhouse Products

எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை எனவே முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை குறைக்கமுடியாது என ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வாரத்திற்கு 5 லீட்டர் பெட்ரோல் போதாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் செயலாளர் டி.ஆர்.பல்லி தெரிவித்துள்ளார்.

கட்டண குறைப்புக்கள்

வாரத்திற்கு 125 கிலோமீட்டர் பயணிக்க இது போதுமானது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாகன உதிரி பாகங்களின் விலைகள் 300 அதிகரித்துள்ள போதிலும் பராமரிப்பை தவிர்க்க முடியாது. எனவே கட்டணக் குறைப்புக்கு செல்லமுடியாது என்று அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US