இலங்கை - இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் களமிறங்கும் முக்கிய தொடர்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வன் வேர்ல்ட், வன் ஃபெமிலி (One World One Family) கிரிக்கட் கிண்ணத்தின் இரண்டாவது பதிப்பு 2025 பெப்ரவரி 8ஆம் திகதியன்று கர்நாடகாவில் நடத்தப்படவுள்ளது
சத்ய சாய் கிராமத்தில் உள்ள சாய் கிருஸ்ணன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப்போட்டி இடம்பெறவுள்ளது.
கிரிக்கெட்டின் முக்கிய மையங்களான இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உயர் ஆற்றல்மிக்க 20க்கு 20 போட்டியாக இது நடத்தப்படவுள்ளது.
மாற்றத்திற்கான ஒரு இயக்கம்
“ஒரு உலகம், ஒரு குடும்பம்" என்பது பண்டைய இந்திய நெறிமுறைகளால் ஈர்க்கப்பட்ட மாற்றத்திற்கான ஒரு இயக்கமாகும்.

இந்தக் கிரிக்கட் போட்டி, இலவச ஊட்டச்சத்து, கல்வி மற்றும் சுகாதார சேவைகள் மூலம் மனிதகுலத்தை மேம்படுத்துவதற்கான, குறித்த நிறுவனத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
குறித்த போட்டியில் ஒரே உலகம் என்ற இந்திய அணியின் சார்பில் இர்பான் பத்தான், யூசுப் பத்தான், நாமன் ஓஜா, பத்ரிநாத், அசோக் டின்டா, பியூஸ் சௌலா, அபிமன்யு மிதுன், வெங்கடேஸ் பிரசாத், சுனில் ஜோசி, பார்தீவ் பட்டேல், சுஜித் சோமசுந்தர், மனோஜ் திவாரி ஆகியோர் விளையாடுகின்றனர்
ஒரே குடும்பம் என்ற இலங்கை அணியின் சார்பில் அரவிந்த டி சில்வா, ரி.எம் டில்சான், சமிந்த வாஸ், உப்புல் தரங்க, திசர பெரேரா, தரங்க பரணவிதான, மிலிந்த சிறிவர்த்தன, அசேல குணவர்த்தன, நுவன் சொய்ஸா முத்தையா முரளிதரன், திலான் துசார, அர்ஜூன ரணதுங்க, ரவீந்திர புஸ்பகுமார, அஜந்த மெண்டிஸ், ரொமேஸ் களுவிதாரண ஆகியோர் பங்கேற்கின்றனர்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றநிலை.. விடுதலை புலிகளின் தலைவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்திய நபர்
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri