இலங்கை - இந்திய பயணிகள் கப்பல் சேவை குறித்து வெளியான தகவல்
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கும், தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் இன்று (13.05.2024) முதல் மீண்டும் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கான அறிவிப்பு
இந்த நிலையில் போக்குவரத்திற்காக முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை மாற்றிக்கொள்ள முடியும் எனவும் அல்லது கட்டணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்திற்கு வரவேண்டிய பயணிகள் கப்பல் தாமதமானமை மற்றும் தவிர்க்கமுடியாத சில சட்டரீதியான அனுமதிகள் காரணமாகவே இவ்வாறு கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கப்பல் சேவையை முன்னெடுக்கவுள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
