சீனாவுடன் பல பில்லியன் டொலர் முதலீடுகளில் கையெழுத்திடும் இலங்கை
சீனாவின் சினோபெக் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படவுள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் உதவியுடன் 2024 ஆம் ஆண்டில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு நேரடி முதலீட்டு ஒப்பந்தங்களில் இலங்கை, சீனாவுடன் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தமது முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்கு 2024 ஆம் ஆண்டிற்காக பல பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய நேரடி முதலீடு இலக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது எனறு அமைச்சர் அமுனுகம தெரிவித்துள்ளார்
இறுதி ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்படவில்லை என்றாலும், இப்போதும் கூட விவாதங்கள் அந்த இலக்கு டொலர்களின் எண்ணிக்கையை மீறும் வகையில் சீராக முன்னேறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அதை இரட்டிப்பாக்க முடியும் மற்றும் ஆண்டின் இறுதியில் இது மூன்று மடங்காக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலீடுகளை கொண்டு வர முயற்சி
இந்தியாவின் அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்திற்கான மின் கொள்முதல் ஒப்பந்தம் அமைச்சரவையால் இந்த வாரம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் அங்கீகரிக்கப்பட்டது.
சீனாவின் சினோபெக் குழுவினால் ஹம்பாந்தோட்டையில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் முதல் கட்ட முதலீடு சுமார் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
எனினும் சீனாவின் சுத்திகரிப்பு நிலையத்தின்; மூன்று கட்ட முதலீடு 5.0 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியம், கனடா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்தும் முதலீடுகளை கொண்டு வர இலங்கை முதலீட்டு சபை முயற்சித்து வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |