உலகளாவிய பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கை - இந்தியப் பொலிஸார் கூட்டு
உலகளாவிய பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் ஒழிந்திருக்கும் குற்றவாளிகள் போன்றோர் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் கூட்டாக செயல்படுவதற்கு இலங்கை மற்றும் இந்திய பொலிஸ் பிரதானிகள் இணங்கியுள்ளனர்.
இந்திய - இலங்கை பொலிஸ் தலைமையதிகாரிகள் கலந்துகொண்ட பேராளர்கள் மட்டத்திலான முதலாவது மெய்நிகர் பொலிஸ் பிரதானிகள் மாநாடு கடந்த வியாழனன்று நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இம்மாநாடு தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவை குறிக்கும் வகையில் இந்தப் பேச்சுக்கள் சுமூகமாகவும், வினைத்திறன் மிக்க வகையிலும் இடம்பெற்றன.
புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் இந்திய தரப்பினருக்கு தலைமை தாங்கிய அதேவேளை இலங்கை பொலிஸ் மா அதிபர் தனது நாட்டின் பேராளர்களுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.
இரு நாடுகளுக்கிடையேயான மிகக்குறுகிய கடல்பாதையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுவோர் மற்றும் ஏனைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக இருதரப்பினராலும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு உளவுத்துறை சார்ந்த மற்றும் ஏனைய பின்னூட்ட கருத்துக்களை நிகழ்நேரத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இங்கு வலியுறுத்தியிருந்தனர்.
உலகளாவிய பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் ஒழிந்திருக்கும் குற்றவாளிகள் போன்றோர் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராக கூட்டாக செயற்பட இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.
மேலெழும் சவால்கள் மற்றும் தற்போதுள்ள பாதுகாப்பு சவால்களை வினைத்திறன் மிக்க வகையில் உரிய நேரத்தில் கையாள்வதற்காக"நோடல் புள்ளிகளை' ஸ்தாபிப்பதற்கும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒத்துழைப்பு பொறிமுறைகளை வலுவாக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பிரதானிகள் மாநாட்டு கட்டமைப்பானது இரு தரப்பையும் சேர்ந்த பாதுகாப்பு அமைப்புக்களால் ஆதரவளிக்கப்படுவதுடன் ,இரு நாடுகளுக்கும் இடையிலான பொலிஸ் படைகளின் ஒத்துழைப்பை மேலும் வலுவாக்கும்.
அதேவேளை இரு நாட்டு மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு உறுதுணையாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri