இலங்கை-இந்திய இணைக்கப் பாலம் தொடர்பில் சரத் பொன்சேகா விமர்சனம்
இந்த நேரத்தில் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கப் பாலம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களுக்கு மூன்று வேளை உணவளிக்கும் வழியைக் கண்டுபிடிப்பதே சிறந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள்
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, இலங்கை மற்றும் இந்தியாவை இணைக்கும் பாலம் அமைப்பது இலங்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனவும், நாடு இன்னும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்தாலும், அவர்களுக்கும் சில உள் அரசியல் பிரச்சினைகள் உள்ளன.
அந்த நாட்டில் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
