சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
எல்லை தாண்டி சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 21 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும் ஒருவருக்கு சிறை தண்டனை விதித்தும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய 21 பேரும் ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட, 18 மாத சிறை தண்டனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 22 இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (15) ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெற்றது.
இதையடுத்து குறித்த 22 கடற்றொழிலாளர்களும் ஊர்காவற்றுறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இவர்களில் ஒருவர், இரண்டாவது தடவையாக இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய நிலையில் அவருக்கு சிறை தண்டனை விதித்தும் ஏனைய 21 கடற்றொழிலாளர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்தும் நீதவான் உத்தவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 22 மணி நேரம் முன்

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
