டெல்லியில் ரணிலுக்கு கடும் அழுத்தம்! இலங்கையின் பாதுகாப்பிற்கு இந்தியாவின் மாற்று வியூகம்(Video)
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நில ரீதியான தொடர்பு ஏற்படுத்தபட்டால் இலங்கை இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே முற்றாக முடங்கிவிடும் என கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தினுடைய ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இந்திய விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்க மீது பாலம் அமைக்கும் விடயத்தில் இந்தியாவின் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
கையெழுத்திடப்பட்ட விடயங்களுக்கும், நிலரீதியான தொடர்பை ஏற்படுத்தும் இந்திய அரசியல் நோக்கத்திற்கும் பாரதூரமான வித்தியாசங்கள் காணப்படுகின்றன.
இது கட்டாயமாக கவனிக்கப்படவேண்டிய விடயமாகும். இலங்கையுடனான வலுசக்தி ஒப்பந்த விடயத்தில் நேரடியான கைச்சாத்திடல்கள் ஒப்பந்தங்கள் காணப்படுகின்றன.
ஆனால் இந்திய இலங்கை பாலம் அமைக்கும் விடயமானது எதிர்கால திட்டமிடல் என்பதை எடுத்துக்காட்டுகிறது." என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான இலங்கை அரசியலில் இந்தியாவின் மறைமுக நகர்வுகளை அலசி ஆராய்ந்து உங்கள் கண்முன் கொண்டு வருகிறது இன்றைய ஊடறுப்பு.





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
