இந்தியாவை விட ஆபத்தான நிலையில் இலங்கை - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை பார்க்கையில், இந்தியாவை விட ஆபத்தான நிலையில் இலங்கை இருப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுமு் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் சுகாதார வசதிகள் மற்றும் சனத்தொகை பரம்பலுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தொற்று வீதம் அதிகமாக காணப்படுகின்றது.
இந்த புதிய வைரஸ் தொற்று வயது வித்தியாசமின்றி அனைவரிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை வைத்திய சபை எச்சரித்துள்ளது.
வெளிநாட்டினரை இந்த நாட்டிற்கு வரவழைக்க வேண்டாம் என வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தினர் எனினும் அதனை அரசாங்கம் செய்யவில்லை.
இந்த நாட்டை முடக்க வேண்டுமென சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தினர், நான்காவது அலை தோற்றம் பெற்றுள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டது. எனினும் அதனையும் இந்த அரசாங்கம் பொருட்படுத்தவில்லை.
இந்த விடயத்தில் அரசியல் தலையீடுகள் அவசியமில்லை. மேலிருந்து கிடைக்கும் அரசில் தீர்மானங்களுக்கு அமைய சுகாதார அமைச்சு செயற்பட வேண்டாமென நாம் வலியுறுத்துகின்றோம்.
இலங்கையில் 220 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். எனினும் அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சரியான நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவில்லை.
நாட்டில் உயிர் காக்கும் மருந்துகள் 40
இலங்கையில் இல்லாமல் போயுள்ளதாக மேலும் 22 உயிர் காக்கும் மருந்துகள் இந்த
வாரத்தில் இல்லாமல் போகுமென தகவல்கள் வெளியாகியுள்ளது.