இலங்கை 2023ஆம் ஆண்டை நல்லிணக்க மீட்சிக்கான ஆண்டாக அடையாளப்படுத்துகிறது: அருணி விஜேவர்தன
இலங்கையில் 2023ஆம் ஆண்டை நல்லிணக்கம், மீட்சி மற்றும் தேசிய ஒற்றுமைக்கான ஆண்டாக அடையாளப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய தினத்தை முன்னிட்டு நேற்று (13.03.2023) வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவினால் சமாதானத்திற்கான பொதுநலவாய தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம்
பொதுநலவாய நாடுகளின் பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு இலங்கையின் அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும் வகையில், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
அமைதிக்கான கூட்டு அர்ப்பணிப்பாக உறுப்பு நாடுகளால் அமைதிக்கான பொதுநலவாய நாடுகளின் கொடியை ஏற்றுவது, பொதுநலவாயச் செயலகத்தால் இந்த ஆண்டு 'நிலையான மற்றும் அமைதியான பொது எதிர்காலத்தை உருவாக்குதல்' என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முயற்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri
