உணவுகளின் விலை சடுதியாக அதிகரிப்பு
இன்று (02) நள்ளிரவு முதல் பல்வேறு உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்சான் இதனை குறிப்பிட்டார்.
சாந்தன் தொடர்பில் 22ஆம் திகதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு : தமிழக அரசு காட்டிய தாமதம்! அம்பலமாகும் உண்மைகள்
உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பின் காரணமாக இவ்வாறு உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதிகரிக்கப்பட்டுள்ள விலை
இதன்படி, ஒரு சாதாரண தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதிய உணவுப் பொதி ஒன்றின் விலை 25 ரூபாவினாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்துவின் விலையை 50 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நுகர்வுப் பொருட்களின் விலையை எந்த வகையிலாவது குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என மேலும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |