ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் இறுதி நிமிட பேச்சுவார்த்தையை நடத்திய இலங்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துடன் இறுதி நிமிட பேச்சுவார்த்தையை இலங்கை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த வாரம் பகிரங்கப்படுத்தப்பட்ட இலங்கை குறித்த ஆணையாளரின் அறிக்கை குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆணையாளரின் அலுவலகத்துடன் சில விவாதங்களை நடத்தப்படுகின்றன. அவர் எழுப்பிய விடயங்களில் உடன்பாட்டை எட்ட முயற்சிக்கப்படுகிறது. எனினும் உரிய முறையான பதிலை வெளியிடவுள்ளதாக இலங்கை அரசாங்கத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஆணையாளரின் அறிக்கைக்கு முறையாக பதிலளிக்க எதிர்பார்க்கப்படுகிறது எனினும் அந்த பதிலை பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னர் ஆணையாளர் மிச்செய்ல் பெச்லெட் அலுவலகத்துடன் ஒருமித்த கருத்தை எட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை அரசாங்கத்தரப்பு கூறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.
2021 ஜனவரி 27 அன்று ஆணையாளர் பெச்சலெட் வெளியிடப்பட்ட தனது அறிக்கையில், இலங்கையின் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமையால் தான் அச்சமடைந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்களில் போர்க்குற்றவாளிகள் எனக் கூறப்படுபவர்களின் வழக்குகளைத் தொடர்வதன் மூலமும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட இலக்கு தடைகளை விதிக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளை அவர் அறிக்கையின் மூலம் கேட்டிருந்தார்.





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
