ராஜபக்ச இராஜ்ஜியத்தின் படுதோல்வி! சிக்கலை கொடுக்கும் பின்னணிகள்!
இலங்கையில் கடந்த வருடம் முதல் வாகனம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாட்டில் வாகனங்களின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிக விலையில் வாகனங்களை விற்பனை செய்வதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் மீண்டும் வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கிய பின்னர் லீசிங் நிறுவனங்கள் பாரிய வீழ்ச்சியடைந்து பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட கூடும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மின்சார கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர(Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது எமது உண்மையின் அலசல் விசேட தொகுப்பு,
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri