இரண்டு இராஜாங்க அமைச்சர்களின் செயலினால் கடும் நெருக்கடியில் அரசாங்கம்
நாட்டின் முக்கிய அமைச்சுக்கு நியமிக்கப்பட்டுள்ள இரண்டு இராஜாங்க அமைச்சர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக அவர்களின் கடமைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உத்தியோகத்தர்களும் கடும் நெருக்கடியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு இராஜாங்க அமைச்சர்களும் ஒரே விடயம் தொடர்பில் தனித்தனியாக செய்தியாளர் சந்திப்புகளை நடத்தியுள்ளனர். அமைச்சு விவகாரங்கள் தொடர்பாக இருவரும் பஸ்பரமாக முரண்பட்ட முடிவுகளை எடுப்பதாகும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சின் சார்பாக பேசும் போது ஒரே விடயத்திற்காக இரண்டு பேரும் சண்டை போடுவதால் அங்கு பணியாற்றும் பொறுப்பான அதிகாரிகள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த இராஜாங்க அமைச்சுப் பதவிப் போட்டி குறித்து ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுகு்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் இந்த அமைச்சின் இராஜாங்க அமைச்சர் பதவிகளில் ஒன்று குறையலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri