சர்வதேச நாணய நிதியத்திற்கு தடையாக அமையும் இலங்கை அரச நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கை
பல அரச நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் வழங்கப்படாமையால் கணக்காய்வு நடவடிக்கைகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பிசி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 28ஆம் திகதிக்குள் அரசாங்க நிறுவனங்கள் தமது நிதிநிலை அறிக்கைகளை கணக்காய்வுக்காக சமர்ப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதிநிலை அறிக்கைகள்
நிதிநிலை அறிக்கைகள் அந்தந்த அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சுகளுக்குப் பொறுப்பான செயலாளர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் சில அரச நிறுவனங்கள் ஒரே நேரத்தில் 5 வருடங்களுக்கான நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பிக்க செயற்பட்டு வருவதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். அது சரியான செயற்பாடு அல்ல என்பதனால் அந்த அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
நிதிநிலை அறிக்கைகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், இலங்கைக்கு கடன் வழங்குவதில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியமும் தடையாக இருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.