இலங்கை அரசின் ஒருநாள் வருமானம் 842 கோடி ரூபா
அரசாங்கத்தின் ஒருநாள் வருமானம் 842 கோடி ரூபாவாகவுள்ள நிலையில் ஒருநாள் செலவு 1467 கோடி ரூபாவாக காணப்படுகின்றது என்று போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் ஒருநாளை கொண்டு நடத்த 625 கோடி ரூபா பற்றாக் குறையாகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பற்றாக்குறை
2018 ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபையைச் சேர்ந்த 1600 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மண்டபத்தில் இடம்பெற்றது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டை ஆட்சிசெய்யும் அனைவருமே அதுதொடர்பில் விவாதிக்க வேண்டும். அரசாங்கத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அந்த விவாதம் அமையவேண்டும்.
இத்தகைய நிலையில் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து அரசியல் தலைவர்கள், தேர்தலை கோருபவர்கள், தேர்தலை அறிவிக்க எதிர்பார்த்துள்ளவர்களும் அது தொடர்பில் மிகுந்த அவதானத்தை செலுத்தவேண்டும்.
தாம் இவ்வாறு குறிப்பிடுவது 2023 ஆம் ஆண்டின் நிலைமை தொடர்பிலேயே. 2024 ஆம் ஆண்டு தொடர்பில் குறிப்பிடும்போது நாட்டின் சுதந்திரத்தின் பின்னர் பல வருடங்களில் இருந்துள்ள நிலைமையே அதுவாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் ஒருநாள் வருமானம் 842 கோடியாகவுள்ள நிலையில் செலவு 1467 கோடி ரூபாவாக காணப்படுவதாகவும், அந்த வகையில் ஒரு நாளில் செலவிடவேண்டிய 625 கோடிரூபா குறைவாகக் காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பூர் பகுதியில் கைதான முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய நால்வருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |