12 வீதமாக வற் வரியை குறைக்கலாம்: அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் குறைக்க முடியும்
ஏற்றுமதி மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதன் மூலம்
டொலர் வருமானத்தை அதிகரிப்பதன் ஊடாக வற் வரியை 12 சதவீதமாகக் குறைக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
அப்படிச் செய்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும். இதன் மூலம் மக்கள் நிம்மதி அடையலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரச வருமானம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த 4 ஆண்டுகளில் இலங்கைக்கு அந்நிய நேரடி முதலீடு வரவில்லை. இலங்கையில் திருட்டும் மோசடியும் நடைபெறுவதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளதால் நேரடி வெளிநாட்டு முதலீடு இல்லை.
திருடர்கள், மோசடி செய்பவர்கள் தண்டிக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு நட்புறவான சூழல் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் ஒரே இடத்தில் இருந்து தேவையான அனுமதியைப் பெற்றால் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இலங்கைக்கு வரும்.
ஒரு நாட்டின் அரசின் வருவாய் என்பது வரி வருவாய் அல்ல. ஆனால் ரணில் விக்ரமசிங்க, அரசாங்க வருமானத்தைக் கண்டறியும் ஒரே வழி வரி வருமானம்தான்.
வரிகளைக் குறைக்க முடியும்
அந்நிய நேரடி முதலீட்டை கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை, சுற்றுலாத்துறை மூலம் புதிய சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதுகின்றனர்.
தேயிலை, தேங்காய் மற்றும் இறப்பர் மூலம் வருடத்திற்கு 2,300 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்ளும் ரணசிங்க பிரேமதாசவினால் நிறுவப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளுக்குப் பின்னர் இலங்கை ஒரு புதிய சந்தைக்குள் நுழையவில்லை.
தகவல் தொழில்நுட்ப சந்தை மற்றும் நிதி முதலீட்டு வலயங்களில் இலங்கை உள்ளடக்கப்படவில்லை. டொலர் வருமானத்தின் அடிப்படையில் அரச வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே வரிகளை குறைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |