யாழ். நல்லூர் பகுதியில் பேருந்தில் தவறி விழுந்து இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு
யாழில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்று (23.2.2024) காலை இடம்பெற்றது.
யாழில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றும் 29 வயதுடைய சிலையடி கற்சிலைமடு ஒட்டுசுட்டான் முல்லைத்தீவினை சேர்ந்த அழகராசா நிதர்சன்
என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
பருத்தித்துறையிலிருந்து யாழ் நோக்கி பயணித்த பேருந்தில் சென்ற குறித்த இளைஞன் கீழே விழுந்த நிலையில் பேருந்தின் சில்லுக்குள் நசியுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்தில் பணியாற்றும் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
[9KKG4IT
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam