அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து வெளியான தகவல்
அரச ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நோக்கம்
ஓய்வூதியம் பெறுவோர், நாட்டுக்கு சுமையாக இல்லாமல் தனது ஓய்வு காலத்தை கழிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே இந்த நிதியின் நோக்கமாகும் என்றார்.
2016 ஆம் ஆண்டு முதல் அரச சேவையில் இணைந்த அரச உத்தியோகத்தர்களுக்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், எதிர்காலத்தில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் இந்த பங்களிப்பு ஓய்வூதியத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியரின் சம்பளத்தில் 8% மற்றும் முதலாளியின் பங்களிப்பாக 12% தொகையானது அரசுப் பணியில் சேர்ந்த பின்னர் உத்தேச நிதியில் மாதந்தோறும் வரவு வைக்கப்பட வேண்டும்.
முன்மொழியப்பட்ட ஓய்வூதிய நிதியை நிர்வகிக்க முகாமைத்துவ சபையால் நிர்வகிக்கப்படும் ஒரு சுயாதீன அமைப்பு அமைக்கப்படும் மற்றும் நிதியை நிர்வகிக்க விசேட தகுதியுள்ள மேலாளர் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
