அரச ஊழியர்கள் மீதான கடுமையான குற்றச்சாட்டுக்கள் : அமைச்சர் அறிவிப்பு
2024ல் இலங்கையின் முழு அரச சேவைக்கும் ஜனாதிபதி சில கொடுப்பனவுகளை வழங்கினார் என்று சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன(Dr Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், இலங்கையில் தாதியர் சேவைக்கு எதிராக அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படாமை மிகுந்த மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகரிக்கப்படும் கொடுப்பனவு
அலரிமாளிகையில் இன்று (12) முற்பகல் நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நான் சுகாதார அமைச்சராக பதவியேற்று 6 மாதங்கள் ஆகிறது. அந்த ஆறு மாதங்களில், இலங்கையின் சுகாதாரத் துறையில் உள்ள மிகப்பெரிய மற்றும் மிகச் சிறந்த தொழில்முறை குழுவான தாதிகளுக்காக சுகாதார அமைச்சு மட்டத்தில் செய்யக்கூடிய சில செயற்பாடுகளை மேற்கொள்ள முடிந்ததில் நான் பணிவாக மகிழ்ச்சியடைகிறேன்.
ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ், இலங்கையின் முதலாவது தாதியர் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. பிரதிப் பணிப்பாளர் நாயகம் பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது.
2024ல் இலங்கையின் முழு அரச சேவைக்கும் ஜனாதிபதி சில கொடுப்பனவுகளை வழங்கினார். அதற்கு அப்பால், உங்களுக்கு எவ்வளவோ பணக் கஷ்டங்கள் இருந்தாலும், இலங்கையின் சுகாதாரத் துறையில் தாதியர் சேவையின் சிறப்பைப் பாராட்டி சீருடைக் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இலங்கையின் சுகாதார சேவையில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.
இந்த நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், இலங்கையில் தாதியர் சேவைக்கு எதிராக அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படாமை மிகுந்த மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் உள்ளது.
2024ஆம் ஆண்டு சுகாதார சேவைக்காக 410 பில்லியன் ரூபா அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |