வருட ஆரம்பத்திலேயே அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
அலவலக நேரத்தில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
2023ஆம் ஆண்டு பொது நிர்வாக அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சமூக வலைத்தள பயன்பாட்டை குறைக்க வேண்டும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அலுவலக நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போது அரச ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
பெரும்பாலான அரச ஊழியர்கள் அலுவலகங்களில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டை குறைத்து, அலுவலக நேரங்களில் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.




