அரச வங்கிகளில் இலட்சக்கணக்கில் கடன் வாங்கி ஏமாற்றிய தொழிலதிபர்கள்
அரசாங்க வங்கிகளில் இலட்சக்கணக்கில் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர்கள் நம் நாட்டில் இருக்கின்றார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வரி நிலுவை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்க மற்றும் இலங்கை மதுவரித் திணைக்களம் போன்ற நிறுவனங்களில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பான உண்மைகளை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்.
அந்த நிறுவனங்களின் மோசடி மற்றும் ஊழல்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும். வரி நிலுவையை வசூலிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதேவேளை, அரசாங்க வங்கிகளில் இலட்சக்கணக்கில் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர்கள் இருக்கிறார்கள்.
கடன் வாங்கிய பின்னர் தொழில்கள் வங்குரோத்தாகி விட்டன என்று காட்டுகிறார்கள். ஆனால் நல்ல இலாபம் ஈட்டும் வேறு தொழில்கள் உள்ளன.
எதிர்காலத்தில் இதுபோன்ற வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் அனைவரும் வரி செலுத்துவதையும், வங்கிக் கடன் செலுத்துவதையும் தவிர்க்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
You may like this video
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam