பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கதல் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ள நிலையில், அது தொடர்பான தகவல்களை தேர்தல்கள் அணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதற்கமைய 22 தேர்தல் மாவட்டங்களில் 690 குழுக்கள் போட்டியிடவுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது ஆணையாளர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
வேட்புமனுக்கள்
எனினும் 74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஆட்சேபனை இருக்கும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அதிகளவான அரசியல் குழுக்கள் போட்டியிடுவதாகவும், மொனராகலை மற்றும் பொலன்னறுவை தேர்தல் மாவட்டங்களில் குறைவான வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் விருப்பு வாக்கு இலக்கங்கள் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.