வன்னியில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்
வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்றையதினம் தாக்கல் செய்தது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது.
வேட்பாளர் பட்டியல்
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று மதியம் வேட்புமனுவினை தாக்கல் செய்தது.
வன்னி மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலாநாதன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடக்குமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், முன்னாள் வடமாகாண அமைச்சர் கந்தையா சிவனேசன், முன்னாள் பிரதேசசபை தவிசாளர் க.விஜிந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பேச்சாளர் க.துளசி, மற்றும் முன்னாள் போராளி யசோதினி, சமூக செயற்ப்பாட்டாளர் மூர்த்தி, வர்த்தகர் அ.றொயன், ஆகியோர் வேட்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் யாழில் சிறீதரன் தலைமையில் வேட்பு மனுத் தாக்கல் செய்த தமிழரசுக் கட்சி

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
